ஜம்மு-காஷ்மீரில் உள்ள மக்கள் அனைவரும் மின்சாரத்தை திருடும் மிகப்பெரிய திருடர்கள் என மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்து அம்மாநில அரசியல் தலைவர்கள் மத்தியில் கடுங்கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அம்மாநில சட்டப்பேரவையில் இது குறித்த எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய எதிர்க்கட்சிகள், அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆவேசத்துடன் கூறினர்.
நேற்று டெல்லியில் அம்மாநில மின் உற்பத்தி கழகத்தின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது குறித்து அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பியபோது அம்மாநில மக்கள் சட்டத்திற்கு புறம்பான முறையில் மின்சாரத்தை திருடுவதாகவும், இதற்காக இடைத்தரகர்களுக்கு அவர்கள் லஞ்சம் கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அவரின் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள அம்மாநில அமைச்சர் அலி முகமது சாகர், அவர் ஒட்டுமொத்த மக்களையும் குற்றஞ்சாட்டவில்லை, இவ்வாறான செயல்களில் ஈடுபடும் கீழ்மட்ட அதிகாரிகள் மற்றும் சில பொதுமக்களை தான் அவர் குறிப்பிட்டதாக தெரிவித்தார்.
ஆனாலும் இந்த சமாதானத்தை ஏற்க மறுத்த அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் மெகபூபா முக்தி, பரூக் அப்துல்லா மாநில மக்களை இழிவுபடுத்திவிட்டதாகவும் அவர் உடனடியாக மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்தினார்.

home
Home
Post a Comment